ஆந்திராவைச் சேர்ந்த சிறுவன் யஷ்வந்த். அவனுக்கு சிறு வயதிலேயே ரத்த அழுத்தம் இருந்தது. மூக்கில் இருந்தும் அடிக்கடி ரத்தம் வழிந்து சிறுவனுக்கு ஏராளமான பிரச்னை ஏற்பட்டது.
ஆந்திராவிலுள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிறுவனுக்கு நோய் தீரவில்லை.
இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் சென்னையில் அறக்கட்டளை வைத்து குழந்தைகளுக்கு மருத்துவ வசதி அளிப்பதை கேள்விப்பட்டு அவரை சிறுவனின் பெற்றோர் அணுகினர். லாரன்ஸ் அச்சிறுவனை விஜய்யிடம் அழைத்து சென்றார்.
சிறுவனைப் பார்த்த விஜய் எவ்வளவு செலவானாலும் நான் பார்த்து கொள்கிறேன். சிறுவனை காப்பாற்றுங்கள் என்று உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து உடனடியாக மலர் மருத்துவமனையில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான். சிறுவனுக்கு ஆபரேஷன் செய்தால் பல லட்சங்கள் செலவாகும் என்று டாக்டர்கள் கூறினார்.
செலவை விஜய் ஏற்றுக் கொள்வதாக அறிவி்த்திருந்ததால் சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது. பெரிய அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவன் உயிர் பிழைத்தான்.
சிகிச்சை முடிந்ததும் காவலன் படப்பிடிப்பிலிருந்த விஜய்யைச் சந்தித்து சிறுவன் நன்றி தெரிவித்தான். விஜய்க்கு, சிறுவனின் பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்.