கதைக்காக
காத்திருக்க மாட்டேன்- விஜய்
திருவனந்தபுரம், ஜன.16: திருவனந்தபுரத்திலுள்ள நியூ தியேட்டரில் சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘வேட்டைக்காரன்’ படம் ஓடுகிறது. நேற்று இந்த தியேட்டருக்கு வந்த விஜய், ரசிகர்களுடன் உரையாடினார். பின் ஏழை மாணவர்களுக்கான விடுதிக்கு சென்று, மதிய உணவும் சில மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
‘போக்கிரி’ படத்தின் 75&வது நாள் விழாவுக்காக திருவனந்தபுரம் வந்திருந்தேன். அதன் பின் இப்போதுதான் வந்துள்ளேன். நான் நடித்த படங்களிலேயே ‘போக்கிரி’யும், ‘வேட்டைக்காரனு’ம் மிகவும் பிடிக்கும். தமிழ், மலையாள சினிமா ரசிகர்களை பிரித்து பார்க்க முடியவில்லை. இருவரும் கணவன்&மனைவியை போன்றவர்கள். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். நல்ல கதை அமைந்தால் மலையாள படத்தில் நடிப்பேன். படம் ஹிட்டாவதற்கு முக்கிய காரணம், டைரக்டர்தான். டைரக்டர் நல்ல கதைகளை உருவாக்கும்போதுதான் படம் நன்றாக அமையும். தற்போது ‘சுறா’ படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் மே மாதம் ரிலீசாகும். ஒரே மாதிரியான பாணியிலிருந்து மாறி, வித்தியாசமாக நடிக்க எனக்கும் ஆசைதான். அதற்கான இயக்குனரும் தயாரிப்பாளரும் அமைய வேண்டும். எனக்கென கனவு கேரக்டர் எதுவும் கிடையாது. ஒரு கதைக்காக ஆறு மாதங்கள் காத்திருந்து நடிப்பதெல்லாம் என்னால் முடியாது. அடுத்தடுத்து படங்களில் நடிப்பதே என் விருப்பம். அடுத்து, ‘பாடிகார்ட்’ மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறினார்.
ENGLISH:
vijay said, IN trivandrum,that i come in kerala for a pokkiri 75th day after that i will come for vettaikaran sucess,
my favourite flim in i act is pokkiri and vettaikaran.movie sucess in the hand of director,on the hard work of director,the movie will be a great success,i presently act in sura its my 50th movie,my prefer to act in differen t character but i dont get offer from such director with different character,my next movie is malayalam remake bodyguard.if good offer come in malayalam i sure act in malayalam with good offer.