Sunday, November 1, 2009

குமுதம் இதழில் வெளியாகிய செய்தி. வேட்டைக்காரன்


தற்போது வெளியகிவுள்ள குமுதம் இதழில் வெளியாகிய செய்தி.
மிழ் சினிமாவின் கமர்ஷியல் `வேட்டைக்காரன்' விஜய்க்கு, தண்ணி காட்டும் லேட்டஸ்ட் சவாலாக வந்தாச்சு ஒரு `லிட்டில் கில்லி! பார்ட்டிக்கு வயது எட்டுதான். ஆனால் அதிரடி ஆட்டத்திலும், லாகவமான பாடி லாங்வேஜிலும், ஸ்டைலிலும் விஜயைவிட பதினாறு அடி பாய்கிற இந்தச் சுட்டியின் பெயர் சஞ்சய். யெஸ், இவர் விஜயின் ஜூனியரேதான்.

தடதடக்கிற ஆக்ஷன் காட்சிகளில் நடித்து விட்டு சோர்ந்து போய் வீட்டுக்கு வருகிற விஜய்யை, ரிலாக் ஸாக்குவது இந்த லிட்டில் கில்லியின் டான்ஸும், ஆக்ஷன் கலந்த ஸ்டைலும்தான். `போக்கிரி' விஜய்யைப் போல ஸ்டைலாக காலரை இழுத்துப் பேசுவது சஞ்சயின் ஜாலி மேனரிஸம். சஞ்சய் எந்த ஸ்டைலை அடிக்கடி செய்கிறார் எந்த டயலாக்கை அவ்வப்போது முணுமுணுக்கிறார் என்பதை வைத்தே எது ஹிட்டாகும் என்பதை விஜய் முடிவு செய்வதும் உண்டு. அது அப்படியே பப்ளிக் ஆவதும் உண்டு. இதனாலேயே சஞ்சய் காட்டும் ரவுசை ரசிப்பது விஜய்யின் மனதிற்கு பிடித்த விஷயம்.

``வீட்டுக்கு வந்தால் அவரது ராஜ்ஜியம் தான். படங்கள்ல நான் பண்ற ஸ்டைல், காஸ்ட்யூம், டயலாக் என எல்லாவற்றையும் பத்தி டீடெய்லாக கமெண்ட் அடிக்கிறது சஞ்சய் ஸ்டைல். ஸ்கூலில் ரிலாக்ஸாக நேரம் கிடைத்தால் போதும், அவரோட ஃப்ரெண்ட்ஸுடன் நம்மளைப்பத்தி தீவிர டிஸ்கஷன் நடக்கும். இந்த டிஸ்கஷனில் என்னை மட்டுமில்ல எல்லா ஹீரோக்களைப் பத்தியும் பேசிக்குவாங்க. சஞ்சய் சொல்ற கமெண்ட்களில் அவரோட ஃப்ரெண்ட்ஸ் சொல்ற பாயிண்டுகளும் இருக்கும். ஸோ நாம பண்ணின ஏதாவது எடுபடலைனா அதை அடுத்து வருகிற படங்களில் திரும்பப் பண்றதே இல்லை. குட்டீஸ் டேஸ்ட்டை நமக்குக் காட்டுறதே சஞ்சய்தான். மொத்தத்துல என்னோட ஸ்டைலிங், ஃபேஷன் விஷயங்களில் சார்தான் என்னோட லிட்டில் அட்வைஸர்'' என்கிறார்  விஜய்.

லேட்டஸ்ட்டாக `வேட்டைக்காரன்' படத்தில் பாடலாசிரியர் கபிலன் எழு திய ஓபனிங் சாங்கான `நான் அடிச்சா தாங்க மாட்ட' பாடலை சஞ்சய் அடிக்கடி முணுமுணுத்தபடி அவரது ஸ்டைலிலேயே ஆட்டம் போட்டிருக்கிறார். இதைப் பார்த்துதான், விஜய் சஞ்சயை இப்பாடலில் ஆட வைக்கலாமே என்ற ஐடி யாவையும் சொல்லியிருக்கிறார்.
ஒரு வகையில் சஞ்சயின் தீவிர ரசிகராக இருக்கும் விஜய், எதிர் காலத்தில் தனது வாரிசையும் சினிமா களத்தில் இறக்கிவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..


-சர்ஜுன் வேட்டைக்காரன்.