Friday, November 20, 2009
விலகி கொண்ட விதி
பெரிய நடிகர்களின் படங்களை விசேஷ தினங்களின் போதுதான் திரையிட வேண்டும்... வாரத்துக்கு 3 படங்களுக்கு மேல் வெளியாகக் கூடாது... இப்படியெல்லாம் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் போட்டு விஞ்ஞான வெள்ளத்தை சங்குக்குள் அடைக்க முயன்றார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர்.
ஆனால், மக்கள் ரசனையைத் தீர்மானிப்பதும், இதைத்தான் பார்க்க வேண்டும் என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதும் பேரழிவில்தான் முடியும். இதை இப்போதாவது உணர்ந்தார்களா தயாரிப்பாளர்கள் என்று தெரியவில்லை... ஆனால் முன்னர் போட்ட கட்டுப்பாடுகளை சத்தமில்லாமல் விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாகின (ஒரு படம்கூட தேறவில்லை என்பது வேறு விஷயம்). அடுத்து தயாரிப்பாளர்கள் வைத்துள்ள பெரிய நடிகர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ள விஜய்யின் படம் 'வேட்டைக்காரன்' விசேஷ தினம் எதிலுலும் வெளியாகாமல் சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே வெளியாகிறது. டிசம்பர் 25தான் கிறிஸ்துமஸ். ஆனால் வேட்டைக்காரன் வருவது டிசம்பர் 18ல்.
தயாரிப்பாளர் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளவர்களே, கவுன்சிலின் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது கடினம் என்று எடுத்துச் சொன்னதாலேயே இந்தக் கட்டுப்பாடுகள் ஆர்ப்பாட்டமில்லாமல் விலக்கிக் கொள்ளப்பட்டன என்று கூறப்படுகிறது