Wednesday, December 23, 2009

விஜய் சிறப்பு பேட்டி



ஆக்ஷனில்
ரிஸ்க் ஏன்?
விஜய்
மெகா ஹிட்டாகியிருக்கிறது, ‘வேட்டைக்காரன்‘. உற்சாகத்தில் இருக்கிறார் விஜய்.
“டைரக்டர் பாபுசிவன் கதை சொல்ல வந்தப்போ, படத்தோட தலைப்பை சொல்லலை. போலீஸ் ரவி என்ற கேரக்டர் பெயரைச் சொல்லித்தான் கதையை சொன்னார். சொல்லி முடிச்சதும் ‘என்ன டைட்டில் வெச்சிருக்கீங்க‘ன்னு கேட்டேன். ‘வேட்டைக்காரன்‘ன்னு சொன்னார். ‘சூப்பர். எப்படியாவது அனுமதி வாங்கி அந்த டைட்டிலையே வையுங்க‘ன்னேன். காரணம் அது எம்.ஜி.ஆர் நடிச்ச படத்தோட தலைப்புங்கறதுதான்”

சண்டைக்காட்சிகள்ல ரிஸ்க் எடுத்தீங்களாமே?
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனோட ‘மதுர’ உட்பட சில படங்கள்ல பணியாற்றி இருக்கேன். இடையில் நடிப்பு, வேறு படங்கள்னு அவர் பிசியா இருந்தார். அதனால 10 படங்கள்ல அவரோட இணைய முடியாம இருந்தது. இந்தப் படத்துல இணைந்தபோது வித்தியாசமா இருக்கணும்னு ரெண்டு பேருக்குமே மனசுக்குள்ள வெறி இருந்தது. அதனால சில காட்சிகள்ல ரிஸ்க் எடுத்தேன். ஆக்ஷன் காட்சிகளின் ஆக்ரோஷத்துக்கு அதுதான் காரணம்.
இதுவரை இல்லாத அளவுக்கு படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைச்சிருக்கே?
உண்மைதான். அதற்கு டைரக்டர், தயாரிப்பாளர், என் தந்தைக்கு மட்டும் நன்றி சொன்னா போதாது. இந்த படத்துக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய ஓபனிங் கிடைக்க காரணம் சன் பிக்சர்ஸ்தான். சன் டிவியில போடப்படும் டிரைலர்கள் வெவ்வேறு விதமா இருக்கு. அந்த மாஜிக்தான் இவ்வளவு பெரிய ஓபனிங்குக்கு காரணம்.
ஜூனியர் விஜய் டான்ஸ் போட்டிருக்காரே?
‘நான் அடிச்சா தாங்க மாட்டே...‘ பாடலை வீட்டுல போட்டுக்கேட்டேன். அப்போ என் மகன் சஞ்சய் டான்ஸ் ஆடியபடியே ரசிச்சான். படத்துல ஆடுறியான்னு கேட்டேன். ‘சரி‘ன்னான். அவன் ஆசையை நிறைவேற்றினான். தொடர்ந்து நடிப்பானா, ஆடுவானான்னு கேட்கிறாங்க. அவனுக்கு இப்போதைய தேவை படிப்புதான். அதனால அதுலமட்டும்தான் அவன் கவனம் செலுத்துவான்.
ஹீரோயின் அனுஷ்கா?
முதல்ல எங்கிட்ட பேசும்போது, ‘உங்களுக்கு இணையா என்னால டான்ஸ் ஆட தெரியாதே‘ன்னாங்க. ஆனா, பாடல் காட்சியில பிரம்மாதமா பண்ணினாங்க. வேறு மொழி படத்துல நடிக்கிறோம்னு நினைக்காம, கதையிலும், கேரக்டர்லயும் ரொம்ப ஆர்வம் காட்டினார்.
பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கு.?
அதற்கு காரணம் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிதான். எல்லா பாடலும் குழந்தைகள் முதல் பெரியவங்க வரை ரீச் ஆகி இருக்கு. இதுல எல்லா பாடலும் ஹிட்டாகியிருந்தாலும் என்னோட பேவரைட் ‘புலி உறுமுது’தான்.