Wednesday, April 21, 2010

சுவாரசியமான சுறா தகவல்கள்

சுறா வை பற்றி S.P.ராஜ்குமார் பேட்டி 


சுறா என்ன கதை?
விஜய், இதுவரை நடிச்ச படங்கள்ல காதலுக்காக போராடியிருக்கிறார், நண்பர்களுக்காக போராடியிருக்கார். ஆனா, இதுல ஒரு குப்பத்துக்காக போராடுறாரு. அந்த மக்களோட வாழ்க்கை உயரணுங்கறதுக்காக போராடுற கதை. கடலும், தோணியும், மீன்களுமான அவங்களோட வாழ்க்கையை, காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லியிருக்கோம். ‘படகோட்டி’, ‘மீனவ நண்பன்’, ‘கடல்மீன்கள்’, ‘கடலோர கவிதைகள்’ மாதிரி, கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் பற்றிய படமாக இது இருக்கும்.
தமன்னா என்ன கேரக்டர்?
தமன்னா கல்லூரி மாணவி. அவரும் விஜய்யும் சந்திக்கிறதும், அவங்களுக்கான நட்பும், காதலும் எல்லாமே காமெடியா இருக்கும். விஜய்யோட போட்டிப்போட்டு டான்ஸ் ஆடியிருக்காங்க தமன்னா. வழக்கமா, சில படங்கள்ல ஹீரோயின்கள் வந்து போகிற மாதிரி இருக்கும். இதுல தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம்.
வடிவேலு?
வடிவேலு வந்து நின்னாலே குபுக்குன்னு சிரிப்பு வரும். இதுல மிரட்டியிருக்காரு. பொதுவா, அவரோட பாடிலேங்குவேஜ் பிரம்மாதமா இருக்கும். இதுல விஜய்யோட நண்பரா, அம்பர்லாங்கற கேரக்டர்ல படம் முழுக்க வர்றார். அவரும் விஜய்யும் சேர்ந்து பண்ற கூத்து, எல்லாருடைய வயித்தையும் பதம் பார்க்கும்.
விஜய் படம்னா ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்குமே?
கண்டிப்பா. கடல்ல இருந்து 12 கி.மீட்டர் தூரத்துல நடுக்கடல்ல பைட் சீன் எடுத்தோம். ரொம்ப ரிஸ்கான காட்சி. தோணியில இருந்துகிட்டு சண்டை நடக்கும். டூப் போடலாம்னு சொன்னோம். விஜய் ஒத்துக்கலை. நானே நடிக்கிறேன்னார். பரபரக்கிற அந்த காட்சியும் படத்துல ஹைலைட்டான விஷயமா இருக்கும். ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கும் ரொம்ப மெனக்கெட்டிருக்கார் விஜய்.
விஜய் படத்துல இருக்கிற எல்லா அம்சங்களும் இதுல இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி. ஒவ்வொரு காட்சிக்கும் விஜய் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். ஏன்னா, இது அவரோட 50வது படம்’
கண்டிப்பா. கடல்ல இருந்து 12 கி.மீட்டர் தூரத்துல நடுக்கடல்ல பைட் சீன் எடுத்தோம். ரொம்ப ரிஸ்கான காட்சி. தோணியில இருந்துகிட்டு சண்டை நடக்கும். டூப் போடலாம்னு சொன்னோம். விஜய் ஒத்துக்கலை. நானே நடிக்கிறேன்னார். பரபரக்கிற அந்த காட்சியும் படத்துல ஹைலைட்டான விஷயமா இருக்கும். ஒவ்வொரு சண்டைக்காட்சிக்கும் ரொம்ப மெனக்கெட்டிருக்கார் விஜய்.
பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருக்கே?
ஆமா. மணிசர்மா இசையில எல்லா பாடலுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கு. படம் பார்க்கிற ரசிகர்கள் கண்டிப்பா, இரண்டு பாடலையாவது ஒன்ஸ்மோர் கேட்பாங்க. விஜய்யோட நடனமும், பாடலும் அவ்வளவு பிரமாதமா வந்திருக்கு. ‘நான் நடந்தா அதிரடி’, ‘தஞ்சாவூர் ஜில்லாக்காரி’ங்கற ரெண்டு பாடலும் பட்டையை கிளப்பும்.

பொன்மனம்’, ‘என் உயிர் நீதானே’, ‘கார்மேகம்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ராஜகுமார். இப்போது விஜய்யின் 50வது படமான ‘சுறா’வை இயக்கியிருக்கிறார்.

சுறா வீடியோ  TRAILER